Thursday, May 28, 2009

கேட்காத கேள்விகள் சொல்லாத பதில்கள்



கேள்வி: மக்களுக்கு சேவை செய்ய தான் தேர்தலில் போட்டியிட்டு வென்றீர்கள் என்றால் கிடைக்கும் துறையில் பணி செய்ய வேண்டியது தானே? ஏன் இத்தனை இழுபறி? பிடிவாதம்?

தாத்தா: எவன் சொன்னது? ஒரு ஓட்டுக்கு ரூ 500 கொடுத்து இருக்கிறோம். அரசியல் செய்வதற்கும் முதலீடு வேண்டும் தம்பி. எந்த துறையில் நன்றாக காசு வருமோ அந்த துறை தானே கேட்க முடியும். வரும் காசில் கட்சிக்கு ஒரு பங்கு, என குடும்பத்திற்கு ஒரு பங்கு, சம்பாதிச்சு குடுக்கும் அமைச்சருக்கு ஒரு பங்கு. மிகவும் சரியாக தொழில் செய்கிறோம்.

கேள்வி: உங்கள் குடும்பத்திற்கே அனைத்து பதவியும் போகிறது என்று குற்றச்சாட்டு இருகிறதே?

தாத்தா: தி. மு. க. என்றல் என்ன தம்பி? திரு. மு. கருணாநிதி என்றும் சொல்லலாம். திராவிடர் முன்னேற்றும் கருணாநிதி குடும்பம் என்றும் சொல்லலாம். 246 தொகுதிகளிலும் எங்கள் குடும்பத்தை நிறுத்த முடியவில்லை என்ற வருத்தம் என்னை வதைக்கிறது.

கேள்வி: டெல்லியில் இத்தனை சண்டை போடுகிறீர்களே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி தருவீர்களா?

தாத்தா: போடா !!

No comments:

Post a Comment