Surround yourself
with people who motivate and encourage you. Avoid pessimists and skeptics. Negative thoughts are more powerful than positive thoughts:
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். தான் எது முயன்றாலும், எது
நடந்தாலும், தன் நண்பன் பாராட்டுவதில்லை
என்ற வருத்தம் அவனுக்கு. இம்முறை எப்படியும் ஒரு சபாஷ் வாங்கி விட வேண்டும் என்று
அவன், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நாயை கண்டு பிடித்தான். அந்த நாய் தண்ணீரில்
நடக்கும் வித்தை தெரிந்தது!!
நாயைக் கூடிக் கொண்டு நண்பனுடன் ஆற்றங்கரைக்குச் சென்றான்.
ஒரு குச்சியை ஆற்றில் வீசி எறிந்து, நாயை எடுத்து வர சொன்னான். நாய் தண்ணீர் மேல்
நடந்து சென்று குச்சியை அழகாக கவ்வி எடுத்து வந்தது. “பார் நண்பா!! இந்த நாயின்
திறமையை!!” என்றான்.
அதற்கு அந்த நண்பன் “அடப் பாவி!! தெரு நாய்க்கு கூட
தண்ணீரில் நீந்த தெரியுமே? உன் நாய்க்கு நீந்தக் கூடத் தெரியாதா??” என்று
கேட்டான்.. இனி நம்மால் ஆகாது என்று, குச்சியையும், நாயையும் விட்டு அவன், ஓடியே
விட்டான்.
No comments:
Post a Comment