Friday, December 20, 2013
Thursday, December 19, 2013
Madurai hotels
மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )
4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி
சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )
2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )
சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )
சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!
கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )
இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -
முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )
மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )
சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை
ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....
விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது
பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...
Wednesday, December 18, 2013
Saturday, November 23, 2013
Wednesday, November 13, 2013
Download You Tube videos without any software
நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்
2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும்
:www.youtube.com/watch?v=9DXqx7y5ME0
இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்.உதாரணத்திற்கு
www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0
இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்
3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும். அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும். உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்.
Tuesday, November 12, 2013
Kidney stone
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
தேநீர், பருப்புக் கீரைவாழைப்பூ, வாழைக்காய்,கொள்ளு கேசரி பருப்பு மாம்பழம்,சீதாப்பழம் அரைக்கீரை,முருங்கைகாய் தாமரைத்தண்டு,எள் பச்சைமிளகாய், நெல்லிகனி
உட்கொள்ள வேண்டியவை:
நிறைய தண்ணீர்,பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)கேழ்வரகு புழுங்கல் அரிசி பருப்பு,காய்ந்த பட்டாணி கோஸ்,கேரட், வெங்காயம், முள்ளங்கி,பாகற்காய், அவரை, வெண்டைக்காய்.
Tuesday, November 5, 2013
Sunday, August 11, 2013
Friday, August 2, 2013
Rocky Balboa The Last "Rocky" Film
Saturday, July 27, 2013
Tuesday, July 23, 2013
7 Minute Total Workout
Wall Sit
Pushup
Abdominal Crunch
Step up onto Chair
Plank
High Knee running in place
Lunges
Push up and rotation
Side Plank
Drink Water
Saturday, July 20, 2013
Thursday, July 18, 2013
Tuesday, July 9, 2013
Wednesday, July 3, 2013
தேடல்:-
நண்பன் ஒருவன் சொன்னான்:-
எனக்கு வருமானம் போதவில்லை.. அவன் அளவு சம்பாதிக்க முடியவில்லை .. அந்த கார் வாங்க முடியவில்லை..
நான் சொன்னேன்:-
உனக்கு நிறைவாக சம்பாதிக்க வேண்டுமா? அல்லது அடுத்தவனை விட நிறைய சம்பாதிக்க வேண்டுமா?
நிறைவாக சம்பாதிக்க வேண்டும் என்றால், தொட்டு விடும் தொலைவில், உன் தேடல்!
அடுத்தவனை விட நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் உன்னைத் தொலைத்து விடும் உன் தேடல்!!
Tuesday, July 2, 2013
Friday, June 21, 2013
School fees to be collected on Monthly basis only
While parents welcomed the court order, school authorities expressed disappointment saying monthly fee collection might complicate the procedure. After the court hearing, advocate Ashok Agarwal said the judgment will have its implications on all unaided, private schools in the country.
Parent's plea
The high court was hearing a petition filed by 10 parents whose wards are studying in Summerfield School in the national Capital. The parents had sought respite from the school's practice of quarterly fee payment. The HC bench said the DSE rules do not permit schools to charge fees in any manner other than monthly basis. It further said even the directorate of education is no authority to allow unaided, private schools to charge fees for more than one month at a time.
Agarwal, appearing for the parents, told the court that most of the unaided, private schools have started insisting on half-yearly payment of fees in advance. "Such a practice on the part of the schools is anti-child, violative of the fundamental rights of the parents as guaranteed to them under Articles 14, 21, 21A and 38 of the Constitution, read with provisions of DSE Act, 1973 and the rules made there under," the advocate said.
Samrina Hassan, a parent from RK Puram, said, "It is a huge relief for parents. It will certainly make things easier."
Daljeet Bhogal, a parent from Janakpuri who has two school going kids, expressed happiness over the judgment and said, "It is a welcome order because depositing fees on quarterly basis is a tough task. Months before submitting the fees, we have to start recounting our accounts. It is very stressful."
Schools, on the other hand, said they had moved to the quarterly system of fee submission for parents' convenience. "As of now, parents are given time to pay the fee and then they also get a fortnight as grace period following which they are sent a reminder. Just this process takes up to a month, so charging fee every month is a little impractical," said Jyoti Bose, Principal, Springdales School, Dhaula Kuan
Monday, June 3, 2013
ஆள் ஆரவாரமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை வாகமன் சுற்றுல்லா போவதற்கு ஒரு நல்ல இடம் !!!
![ஆள் ஆரவாரமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை வாகமன் சுற்றுல்லா போவதற்கு ஒரு நல்ல இடம் !!!](http://i1.wp.com/inruoruthagaval.com/wp-content/uploads/2013/05/good-place.jpg?resize=350%2C250)
இடுக்கி மாவட்டம் என்பதால் முக்கால்வாசிப்பேர் தமிழர்கள்தான். பல்லாண்டுகளுக்கு முன்பு தேயிலைத்தோட்ட வேலைக்காக இங்கே வந்தவர்கள் இங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். அதனால் தமிழர்களுக்கு மொழிப் பிரச்னையில்லை. ஊட்டி, கொடைக்கானல் போல “சைட் சீயிங்’ விஷயங்கள் ஏராளம் உள்ளன.
வாகமன் மிடோஸ், குட்டியாறு அணைக்கட்டு, சூசைட் பாயிண்ட், குருசுமலை, பைன் பாரஸ்ட், தங்கல் பாறை, முருகன் ஹில்ஸ், வனவிலங்கு சரணாலயம் என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. பைன் ஃபாரஸ்ட்டில் நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருக்கும் பைன் மரங்கள் ஒரு ஆச்சர்யம்தான். “பேராண்மை’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கே தான் படமாக்கப்பட்டது என்கிறார்கள்.
சூசைட் பாயின்ட்டில் நின்று கீழே பார்த்த போது நமக்கு தலை சுற்றியது. எந்த வித பாதுகாப்பு வேலியும் இன்றி இயற்கையாகவே இப்பகுதி உள்ளது. சுய கவனமுடன், கட்டுப்பாட்டுடன் இப்பகுதியை ரசிப்பது நல்லது.
இங்குள்ள குருசு மலை புனித செபாஸ்டின் சர்ச் நிர்வாகத்தின் கீழ் ஆஸ்திரேலிய பசுக்கள் வளர்க்கப்பட்டு இப்பகுதி முழுமைக்கும் பால் சப்ளை செய்யப்படுகிறது. மலையுச்சியில் சிலுவை அமைக்கப்பட்டுள்ளது. புனித தோமையார் வருகைதந்த இடம் இது என்பதால் இந்த இடத்தை மிகவும் புனித இடமாக கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள்.
இப்போதுதான் பிரபலமாகி வருவதால் சுமார் 30 ரிசார்ட்டுகள்தான் இங்கு உள்ளன. லாட்ஜுகளில் 300 ரூபாய்க்கு ரூம் கிடைக்கும். ரிசார்ட்டுகள் 700 முதல் 15000 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது.
இன்னொரு விஷேசம் என்ன தெரியுமா?
இங்கே ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பாராகிளைடிங். தெற்காசியாவிலேயே ஒரே நேரத்தில் 75 கிளைடர்கள் பறப்பது இங்குதானாம். பாராகிளைடில் கிளப் ஆண்டுதோறும் இந்த சாகச நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அப்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
தென்றல் காற்று, கண்ணுக்கு தென்படும் இடமெல்லாம் பச்சைப்பசேல் புல்வெளிகள் என பூலோக சொர்க்கத்தில் சுற்றி வந்த உணர்வே நமக்கு ஏற்பட்டது. இந்த கோடை விடுமுறைக்கு வாகமனுக்குச் செல்ல தயாராகிவிட்டீர்கள்தானே…!
வாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும், சிறிதும் பெரிதுமான அருவிகளும், ஓடைகளுமாய் நிறைந்து கிடக்கிறது. இன்னும் அதிகளவு மக்கள் வெளிச்சம் படாததால் பிளாஸ்டிக் குப்பைகள், வாகன இரைச்சல், டீசல் புகை இன்றி புதிதாய் பூத்த மலர் போல பரிசுத்தமாய் இருக்கிறது.
அமைதி விரும்பிகள் தவற விட கூடாத அற்புதமான இடம் ..
CINI REFERENCE ..
“கிரீடம்’ படத்தில் “அக்கம் பக்கம்…’ பாடல்கள் படமாக்கப்பட்டது
கணபதி சில்க்ஸ் விளம்பரத்திற்காக மாதவன் எகிறி எகிறி குதிப்பாரே.. அது இந்த இடத்தில்தான்.
பையா படதில் .. ‘அடடா மழைடா’ பாடல் படமாக்கப்பட்ட இடமும் இதுவே.
வழிகாட்டி
கோட்டயத்தில் இருந்து 65 KM
கொச்சினில் இருந்து 100 KM
கோவையில் இருந்து 250 KM
பஸ் வசதி உண்டெனினும், தனி வாகனங்களில் செல்வது உசித்தம். ஒவ்வொரு
ஸ்பாட்டிற்க்கும் 5 – 20 KM தூர இடைவெளி இருப்பதால். இந்த இடத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை. அட்டை பூச்சிகள். சற்றே கவனமுடன் இருப்பது நல்லது. தேக்கடி இங்கிருந்து 60 KM தொலைவிலும், மூணார் 160 KM தொலைவிலும் அமைந்துள்ளது. நேரம் இருப்பின் அங்கும் ஒரு ரவுண்டு அடிக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து குமுளி வழியாகவும் வாகமனுக்கு வரலாம்.
Monday, May 27, 2013
Thursday, May 2, 2013
Sunday, March 24, 2013
Fast food facts.
You would have to walk for seven hours straight to burn off the calories in a large Coke, a large fry, and a Big Mac.
In order to copy the flavor of a strawberry, fast food corporations use a disgusting mix of chemicals. Just a few of these include ethyl acetate, phenythyl alcohol, rose, and solvent. A strawberry shake contains 50 different chemicals altogether!
Propylene glycerol, a chemical used for antifreeze, keeps your salad "fresh" and crispy. This chemical can cause skin and eye irritation, so why would you want to eat it?
Many fast food chains dip their french fries in sugar to give them that golden brown color. Not only are you consuming fat and starch when you eat fries, but you're also getting your sugar intake for the day!
Don't assume that eating chicken is the healthier fast food option. Grilled chicken sandwiches, chicken nuggets, and even the chicken on salads might contain beef. For example, McDonald's Chicken McNuggets contain several beef additives disguised with secret names like "extract" or "essence."
Studies revealed that 50% of fountain drink dispensers are contaminated with fecal bacteria. Still want to order that large Coke?
Tuesday, February 19, 2013
Monday, February 18, 2013
Duplicate documents
உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படித் திரும்பப் பெறுவது?
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்துவிட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்டவேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி)
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது
ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பமனு கொடுக்கவேண்டும்.
5.பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
9.பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து
பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை:
15 வேலை நாட்கள்.
நடைமுறை:
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும்