Tuesday, January 27, 2009

MOVIE REVIEW


VILLU:-

விஜய் ன் மற்றும் ஒரு படம். விஜய் ன் அறிமுக காட்சியில் பாவடை சேலை பெட்டிகொட் எல்லாம் மூடியபடி ஒரு நிமிஷம் அப்படியே நிற்கிறார். அது காமெடி காட்சியா? சண்டை காட்சியா? என்று தெரிவதற்குள் சண்டை முடிந்து, குஷ்பு பாதி திரை மறைய ஒரு குத்தாட்டம் போடுகிறார்.

முதல் பாதி படம் வடிவேல் காமெடி. பத்து நிமிஷ கதையை படம் முழுவதும் நகர்த்த டைரக்டர் மிகவும் கஷ்டப் படுகிறார்.

நயன் தாரா வழக்கம் போல பாடல் காட்சியில் ஜட்டி, பாடியுடன் வந்து ஆ(ட்டு)டுகிறார்.

பிற்பாதியில் ஒரு பாட்டு, ஒரு சண்டை, climax ல் பெரும் சண்டை.

final review:- படத்தில் ஒரு பாடலில், பீமனிடம் "கதை" யை கேட்டேன் என்று ஒரு வரி வரும். கதை என்று ஒன்று இல்லாமல், இப்படியே நடித்துக் கொண்டு இருந்தால் குருவி படத்தில் வருவது போல் விஜய் பொழைப்பு "டண்டாண்டா டர்ர்ணா" என்று கிழிந்து விடும். வேறு வேலை இல்லை என்றால் பார்க்கலாம்.

Marks:- 35/100

Wednesday, January 21, 2009

New Definition

சிறியவர்:-தெரியாமல் அறியாமல் சிறிய தவறு செய்பவர் (நானும் என் நண்பர்களும்)
பெரியவர்: தெரிந்தே பல தவறு/ பாவம் செய்பவர் (ராமலிங்க ராசு, புஷ், சதாம், ராஜபக்ஷே)
கற்பு: யாருக்கும் தெரியாமல் இழப்பது
ஒழுக்கம் உண்மை: மற்றவரிடம் எதிர்பார்ப்பது
உபதேசம்:நாம் அடுத்தவர்க்கு சொல்வது