விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு இங்கே யார் உள்ளார்.?
தலைவன் ஆனாலும,் நடிகர் ஆனாலும், மத குருமார் ஆனாலும், விஞ்ஞானம் அல்லது கடவுளே ஆனாலும், கேள்விகள் கேட்க்கப் படும்.
தெரிந்தால் பதில் கொடு, தெரியாவிட்டால் விட்டு விடு.
உண்மை இருந்தால் ஜெயித்து விட்டு போகட்டும்.
அதை விட்டு, கேள்வியே கேட்க கூடாது என்பது, சகிப்புத்தன்மை இல்லை என்று பொருள்.
Thursday, February 26, 2015
tolerance
Sunday, February 15, 2015
வீரன்
போரில் வெற்றி நிச்சயம் என்று தெரிந்து களம் காண்பவன் வீரனா?
வெற்றி தோல்வி தெரியாமல் களமாடுபவன் வீரனா?
Thursday, February 12, 2015
Protect car from rodents
எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் - மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். ‘மிளகு மிளகு... விலகு விலகு’ என்று எலிகள் அலர்ஜியாகப் பாடியபடியே ஓட்டம் எடுத்துவிடும். ஆனால், கார் ஓட்டி இன்ஜின் சூடாகும்போது, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டதுபோல் ஒரு வாடை வருவதைத் தடுக்க முடியாது.
2. நாட்டுப் புகையிலை என்றாலும் எலிகளுக்கு அலர்ஜியான விஷயம். புகையிலையை ஆங்காங்கே கட்டி அல்லது ஒட்டிவிடுங்கள். புகையிலை வாசனைக்கு எலி அண்டாது.
3. நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் பூச்சிகளிடமிருந்து உடைகளைப் பாதுகாக்க நாப்தலின் உருண்டைகளை வைத்திருப்பீர்களே... அதில் நான்கைந்து உருண்டைகளை இன்ஜின் பகுதியில் வைத்து விடுங்கள். இதுவும் நல்ல ஐடியா.

5. கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. அமெரிக்கத் தயாரிப்பான இந்த மெஷின் சென்னை ஜி.பி. ரோட்டில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது. ஆனால், இந்த இசை... நேரம் போகப் போக, மற்றவர்களுக்கும் எரிச்சல் தர வாய்ப்பு உண்டு.
6. கொஞ்சம் டீஸன்ட் ஆக எலிகளை எலிமினேட் செய்ய விரும்புபவர்கள், இதற்கென விற்கும் எலி வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.
7. எலிகளை விரட்ட மூக்குப் பொடியும் பெஸ்ட் ஆப்ஷன். மூக்குப் பொடியையும் தூவி எலிகளை விரட்டலாம்.