Thursday, April 30, 2009

தாத்தா உண்ணாவிரதம்



தமிழ்
ஈழம் காண போர் நிறுத்தம் வேண்டி கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். தலைமாட்டில் ஒரு மனைவி, கால்மாட்டில் ஒரு மனைவியுடன் அவர் காலை ஆறு மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை தாள முடியாத பசியோடு, பல்லாயிரக்கணக்கான பசித்த தமிழர்களுக்காவும், சிங்களர்கள் போரில் புசித்த தமிழர்களுக்காவும் உண்ணாவிரதம் இருந்தார்.
கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும் செய்தி வெளிவந்த உடன், உடன்பிறப்புக்கள் பஸ்களை நிறுத்தியும் கடைகளை மூட சொல்லியும் ஜனநாயக முறையில் கடமை ஆற்றினர்.
கருணாநிதி மற்றும் அவர் குடும்ப கட்சிக்காரர்கள் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து தாங்கொணா துயரம் கொண்டதை அடுத்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.